கீழடியில் நடைபெற்ற 10 சதவீத அகழாய்வு போதுமானது இல்லை: அமர்நாத் ராமகிருஷ்ணா

201 0

கீழடியில் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் 6-ம் கட்ட அகழாய்வில், கீழடி முழுவதும் அகழாய்வு செய்யப்பட வேண்டும் என, இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் நேற்று (டிச.8) தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற ‘கீழடியில் கிளைவிட்ட வேர்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடி நாகரிகம் என்பதை சங்க கால நாகரிகம் என அழைப்பதே பொருத்தமானது என தெரிவித்தார்.

“6-ம் கட்ட அகழாய்வின் போது கீழடி முழுவதுமாக தோண்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். ஏனென்றால், இதுவரை கீழடியில் 10% தான் அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த 10 சதவீத அகழாய்வு போதுமானது இல்லை” என அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.