வியட்நாமில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வியட்நாம் நாட்டில் வின்புக் மாகாணத்தில் பல மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு உணவு விடுதி செயல்பட்டு வந்தது.
அந்த உணவு விடுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ உணவு விடுதியின் தளத்தில் மளமளவென பரவியது. அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்து ஓட்டம் எடுத்தனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உடக் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
வியட்நாமில் இந்த ஆண்டு மட்டுமே இதுவரை 3,454 கியாஸ் சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீ விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 88 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

