கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இரத்தினபுரம், உருத்திரபுரம், ஆனந்தபுரம், சிவபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், பன்னங்கண்டி, சிவபுரம், கண்டாவளை, தட்டுவன்கொட்டி, சிவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், முல்லைதீவு தண்ணிமுறிப்புகுள வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

