நெடுந்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் அங்கு இடம்பெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் வரும் 12ஆம் திகதிவரை இடம்பெறுகிறது.
இதில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் படகு மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வந்தன. எனினும் இன்று கடல் கொந்தளிப்பு நிலை காணப்பட்டதால் உலகுவானூர்தி மூலம் அங்கு வினாத்தாள்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

