முஸ்லிம்களை சவூதிக்கு விரட்டியடிக்க வேண்டும் – ஞானசார தேரர்

287 0

kkkaஸரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் ஸரியா சட்டம் தொடர்பில் போராட்டம் ஒன்றைக் தௌஃபிக் ஜமாத் என்ற அமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதற்கு எதிராக நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த நாட்டில் பைத்திய சட்டம் உள்ளது போல தெரிகின்றது.

பொலிஸார் வடக்கில் அடிவாங்குகின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களிடம் சட்டம் பேசுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.