உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்- மு.க.ஸ்டாலின்

50 0

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.கடலூரில் வெள்ளத்தில் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆறுதல் கூறினார். பின்னர் அவர் புதுவை வழியாக சென்னை திரும்பினார்.

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 3 வருடமாக உள்ளாட்சி  தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க. அரசு காலம் கடத்தி வந்தது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் யாரேனும் நீதிமன்றத்திற்கு சென்று தடை பெற வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. முயற்சி செய்து வந்தது.
சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் உள்ளாட்ச்சி அமைப்புகளுக்கு தொகுதி மறு சீரமைப்பில் முறையாக செய்யவில்லை என்று தான் தி.மு.க. நீதி மன்றம் சென்றது. ஆனால் தேர்தலை நிறுத்த தி.மு.க. எந்த விதத்திலும் முயற்சிக்கவில்லை.
ஆனால் அ.தி.மு.க.  அமைச்சர்கள் தி.மு.க. தான் தேர்தலை நிறுத்த முயற்சிக்கின்றது என  பொய் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள்.

தேர்தல் ஆணையத்திடம் உரிய பதில் கிடைக்காததால் நீதிமன்றம் சென்றோம். தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. 2 கட்ட தேர்தல் என்பது வேடிக்கையாக உள்ளது.  இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிவருகிறோம். வக்கீல்களுடன் ஆலோசனை செய்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தேர்தலை முறையாக நடத்த அணுகுவோம்.

இவ்வாறு ஸ்டாலின்  கூறினார்.