நேற்று அதிகாலையில் 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்களை கடற்படை மற்றும் புத்தளம் பொலிஸார் இனைந்து கைது செய்துள்ளனர்.

கடற்படை மற்றும் புத்தலம் பொலிஸார் இனைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் இவர்களிடமிருந்து 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவும் மீட்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்ள் புத்தளம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

