இரத்தினபுரி – பலங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஓப்பநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூனுவல பகுதியில் இன்று பிற்பகல் பஸ் ஒன்றுடன் லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓப்பநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இரத்தினபுரியிலிருந்து பலங்கொடையை நோக்கி சென்ற தனியார் பஸ்சுடன் பலங்கொடையிலிருந்து இரத்தினபுரி நோக்கி வந்த லொறி மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது லொறியின் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்து பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

