ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

239 0
அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்தியதாய் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

வழக்கு இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளை ரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதன்போது, நீதிமன்றில் அறிவித்தார்.

அதன்படி, வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் சதொச நிறுவனத்தில் 153 ஊழியர்களை அவர்களின் பணிகளில் இருந்து நீக்கி அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழுவால் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.