வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி – மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று(புதன்கிழமை) மாலை 6.05 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாற்காலியில் வந்து பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.
வட மராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

