குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, நாட்டை விட்டு அனுமதியின்றி வெளியேறியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான உத்தரவை பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்துக்கு பிறப்பித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு நேற்று (24) வெளியேறியிருந்தார்.
மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் நேற்று (24) பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிஷாந்த டி சில்வா விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

