யாழில் கார் மோதி குடும்பத்தலைவர் பலி

360 0

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்து இடம்பெற்றதையடுத்து காரைச் செலுத்திச் சென்ற யாழ்.நகரில் பிரபல நகைக் கடை உரிமையாளர், வாகனத்தைச் சம்பவ இடத்தில் கைவிட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.