மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்

160 0

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோ சனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த 7-ம் தேதி நடந்தது. இதில், 7 முக்கிய தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் நடைமுறை குறித்தும் இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்களுடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், நிதித் துறை செயலாளர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநக ராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி களின் தலைவர்கள் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந் தெடுப்பதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப் பட்ட கவுன்சிலர்கள் மூலம் இந்த பதவிக்கானவர்களை மறைமுகமாக தேர்ந் தெடுப்பது குறித்து இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதற் கேற்ப அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறை உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர் களின் ஆலோசனையைப் பெற்று இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலின்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் நேரடி தேர்தல் மூலம் தேர்வாகினர். பின்னர், 2016-ல் நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. முதல்வராக இருந்த ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, மறைமுகத் தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு, நேரடி தேர்வு முறையை கொண்டுவர உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், மறைமுக தேர்தல் முறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.க்கு அந்தஸ்து

இதுதவிர, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், நிதி பங்கீட்டுக்கும் அமைச் சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் எமினென்ஸ்) என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2017-ல் கொண்டு வந்தது.

இத்திட்டப்படி 10 அரசு கல்வி நிறு வனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வாகும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.

அதன்படி சென்னை ஐஐடி உட்பட 8 அரசு கல்வி நிறுவனங்கள், வேலூர் விஐடி உட்பட 8 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகிய மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

எனினும், மாநில அரசு நிதி பங்களிப்பை உறுதி செய்த பின்னரே, அதிகாரப்பூர்வமாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி பங்கீடு இழுபறியால் தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.250 கோடி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், 69 சதவீத இடஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது’ என்று மத்திய அரசு ஏற் கெனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த நிலையில், நிதியைப் பங்கிட்டுக் கொள்வதற்கான ஒப்புதலை தமிழக உயர்கல்வித் துறை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்க இருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொங்கல் பரிசு

இதுதவிர, சில தொழில் நிறுவனங் களுக்கான விரிவாக்கத்துக்கும் அமைச் சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப் பட்டன. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் திட்டத்தை முன்கூட்டியே அறிவித்து செயல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் நிதியுதவிநலிந்த ஏழை தொழிலாளர் குடும்பங் களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில், அத் திட்டத்தையும் விரைவில் அறிவித்து செயல்படுத்த அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.