தெதிகம – கெடவலதெனிய பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 49 மற்றும் 58 வயதுடைய புலத்கொஹூபிடிய, கொடியாகுமுர, பெலவத்த மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தெதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

