திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு போலி அனுமதி அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாக கூடுதல் எஸ்.பி. வனிதாவின் குற்றச்சாட்டுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. வரும் டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றமும், டிசம் பர் 10-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபத் திருவிழா பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித் தார். துறை வாரியாக மேற் கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, அதிகாரி களுக்கு ஆலோசனைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங் கினார்.
காவல்துறை சார்பில் கூடுதல் எஸ்.பி., வனிதா பேசும்போது, “கார்த்திகை தீபத் திருவிழா நாளன்று, அண்ணாமலையார் கோயில் உள்ளே 4 ஆயிரம் பேர் செல்வதற்கு அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்படுகிறது. ஆனால் 8 ஆயிரம் பேர் செல்கின்றனர். போலி அனுமதி அட்டைகள் புழக்கத்தால் சிரமம் ஏற்படுகிறது” என்றார். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பனீந்திரரெட்டி, பேசும்போது, “ஒரு அனுமதி அட்டைக்கு ஒரு நபரை மட்டுமே அனுமதிக்க வேண் டும்” என்றார்.
அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்ச ந்திரன் பேசும்போது, “தீபத் திரு விழாவுக்கு போலி அனுமதி அட்டை என்பது கிடையாது. முறை கேடாக அனுமதி அட்டை பயன்படுத் தப்படுவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி வாகனங்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

