ஸ்கூட்டரில் சென்றபோது அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி சக்கரத்துக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கோவை
சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவருடைய மகள் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(வயது 31). இவர், சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கணக்காளராக வேலைபார்க்கிறார். நேற்று முன்தினம் காலை ராஜேஸ்வரி வேலைக்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவர் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதி வழியாக சென்றார். அப்போது அந்த பகுதி சாலை தடுப்பில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. அதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராஜேஸ்வரி, தன்மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறிய அவர், தனது ஸ்கூட்டரோடு சறுக்கி கீழே விழுந்தார்.


