கிளி்நொச்சி முழங்காவில் பகுதியில் 104 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் வைத்து குறித்த கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து சென்ற விசேட போதை ஒழிப்பு பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பெற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கைதானவர்களை குறித்த குழுவினர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேற்கொண்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

