தீவிரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றை ஆரம்பித்து அதனை வளர்த்தவர்கள் மற்றும் கொலை, பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றுடன் தொடர்புடைய எவரையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியான பின்னர் நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன்.
ஒவ்வொருவரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் எனது நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘இளைஞர்கள் குழுவுடன் சஜித் பிரேமதாச’ என்ற தலைப்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், இளைஞர் குழாமினால் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும் வழங்கினார்கள்.

