எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடைமுறையை தவிர்ப்பதற்கு அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றமடையாமல் உள்ளமையின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒக்டோபர் மாதத்தில் திருத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையிலேயே எரிபொருளினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் – 137 /=
ஒரு லீட்டர் 95 ரக ஒக்டேன் – 161 /=
ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் – 104 /=
ஒரு லீட்டர் சூப்பர் டீசல் – 132 /=

