சஜித் வெற்றிப்பெற்றால் மாத்திரமே இராணுவ வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம்..!

210 0

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே நாட்டுக்காக போராடி பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பதாக 2007 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவரின் மனைவி நிர்மலா புஷ்பாஞ்சலி தனுவத்த தெரிவித்தார்.

 

கொழும்பு 5 இல் உள்ள திய ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற உதவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

1995 ஆம் ஆண்டு எனது கணவர் இராணுவத்தில் இணைந்தார்.  யுத்தத்தின் போதும் கடந்த 2007 ஆம் ஆண்டு கால்களை இழந்தார்.  எனினும் அரசாங்கத்தால் எமக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் பல முறை அறிவித்திருக்கிறோம். எமக்கு நிரந்தர குடியிருப்பு கூட அமைத்து தரப்படவில்லை.

நேரடியாக சென்று உரிய தரப்பினரிடம் அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு மாற்றத்தின் பின்னர் புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம்.

அதன் பின்னர்  2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து கணவருக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது. யுத்தத்தின் போது நாட்டுக்காக போராடிய இராணுவ வீரர்களுக்கு மாத்திரமன்றி அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த அரசாங்கமே நிவாரணம் வழங்கி அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கியது.

எனவே தான் இம்முறை தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானத்திருக்கிறோம். சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே நாட்டுக்காக போராடி பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.