இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க பிராஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்ஷ கைவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றியிருந்தார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜை என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை கைவிட்டு மாற்று பொய்ப் பிரசாரம் ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்.
அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்தால் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள விமானச் சீட்டு போலியானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள குறித்த ஆவணமானது கடந்த மே மாதத்திற்குரியது. எனினும் அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டவர்கள் பட்டியலிலேயே கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

