‘ஜனநாயகத்தின் மீது கோட்டாவுக்கு நம்பிக்கையில்லை’

68 0
80 பக்கங்களைக் கொண்ட கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் ​என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகத்தின் மீது கோட்டாவுக்கு நம்பிக்கையில்லை என்பதையே இதுகாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ராஜபக்ஷக்கள் ஆட்சியில், ஜனநாயகம், சுதந்திரம் இல்லாதொழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு மீண்டும் அந்த யுகத்தை நோக்கிச் செல்லக்கூடாதெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.