சிலிண்டர்களில் எரிவாயு கசிவை கண்டறியும் புதிய கருவி: இந்தியன் ஆயில் நிறுவனம் வடிவமைப்பு

346 0

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு கசிவைக் கண்டறிவதற்கான புதிய கருவியை இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:வீடுகள், கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்சிலவற்றில் எரிவாயு கசிவுஇருப்பதாக வாடிக்கையாளர் களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, வாயு கசிவைக்கண்டுபிடிப்பதற்காக புதிய கருவியை உருவாக்கும் முயற்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டது. தற்போது, அதற்காக பித்தளை வால்வு மற்றும் வளையம் போன்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம்சிலிண்டர்களில் எரிவாயு கசிவுஇருப்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இக்கருவிகளை எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளுமாறு சிலிண்டர்களை வீடுகளுக்குவிநியோகம் செய்யும் ஏஜென்சிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியரிடம், சிலிண்டரின் மீதுள்ளசீல், எடை, அழுத்தம், எரிவாயுகசிவு உள்ளிட்ட 5 பரிசோதனைகளை கட்டாயம் செய்து தர வேண்டுமென நுகர்வோர்கள் கோர வேண்டும். எரிவாயு நிரப்பும் மையங்களிலும் சிலிண்டர்களில் எரிவாயு கசிவு இருப்பதைக் கண்டறிய சோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.