திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் 1060 மீட்பு

37 0

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற் படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைத்துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ரவைகள் மிக பழையானதாக காணப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைக்காக கடற்டையின் தலமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.