முரசொலி ஆவணத்தை தி.மு.க. ஒப்படைக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

35 0

முரசொலி ஆவணத்தை தி.மு.க. ஓப்படைக்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் சி.ஏழுமலை அக்கட்சியிலிருந்து பிரிந்து பா.ஜனதாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உரிய நேரத்திற்கு முன்பு முரசொலி ஆவணத்தை தி.மு.க. ஓப்படைக்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும்.

திருவள்ளுவர் பற்றி அரசியலாக்குவது வேதனைகுரிய வி‌ஷயமாகும். திருவள்ளுவரை பா.ஜனதா சொந்தம் கொண்டாடவில்லை.

காவி நிறம் என்பது பா.ஜ.க.வின் நிறம் அல்ல அது ஓரு பொதுவான நிறம். திருவள்ளுவரின் அடையாளத்தை தி.மு.க.வினர் அழிக்க நினைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.