இனவாதத்தை தேற்கடித்து அனைவரும் சமாதானமாக இந்த நாட்டிலே வாழவும் தங்கது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் நீங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி சஜித்பிறேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குங்கள் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவை ஆதரித்து பிரசார கூட்டமொன்று ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
நாட்டில் இனவாத்தை தேற்கடித்து அனைவரும் சமாதானமாக இந்த நாட்டிலே வழவும் தங்கது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் எதிர்வரும் 16 ஆம் திகதி காலையில் வாக்குச்சாவடிக்கு சென்று அன்னப்பறவைக்கு நேரே புள்ளடியிட்டு சஜித்தை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குமாறு உங்களிடன் நான் கேட்டுக்கொள்கின்றேன். இதன்பின்னர் பாராளுமன்றத்தின் பொது இணக்கப்பாட்டினை பெற்று அனைவரின் இணக்கப்பாட்டோடு ரணில் விக்கிரமசிங்கவும், சஜித்பிறேமதாசவும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை சிறந்த பொரளாதார அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல வழியேற்படும் என்தனை நான் சொல்லிக் கொள்ளவிருப்புகின்றேன்.
நாங்கள் இங்கு வந்திருப்பது எதிர்வரும் 16 ஆம் திகதி சஜித் பிறேமதாசவை ஜனாதிபதி ஆக்குதற்காக உங்களது பெறுமதி மிக்க வாக்குகளை பெற்றுக் கொள்ளவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம்.
ஆயிரக்கணக்காகன இளைஞர்கள் இந்த இடத்திலே ஒன்றுகூடி அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக இங்கு வந்திருப்பதனையிட்டு நான் பெருமையடைகின்றேன். இந்த நாட்டிலே நாங்கள் கொண்டுவர இருக்கும் மாற்றம் என்பது ஒரு குடும்பத்திடம் அதிகாரத்தை கொடுப்பதாக நாட்டில் வாழும் பல குடும்பங்களிடம் அதிகாரத்தை கொடுப்பதா இதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
இந்த நாட்டிலே 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஒரு பாரிய மாற்றத்தினை இந்த நாட்டிலே ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணையும்மாறு கோரியிருந்தோம் அதற்கான காரணம் இந்த நாட்டில் அதுவரை நிலவி வந்த சர்வதிகார ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே அதனை நீங்கள் எங்களுக்காக செய்து கொடுத்தீர்கள்.
அந்த மாற்றத்தின் ஊடாக ஒரு ஜனாதிபதி எங்களுக்கு கிடைத்தார். இருந்தும் எங்களுக்கு 115 பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஆகவே நாங்கள் ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைத்தோம். அந்த கூட்டு ஆட்சியானது காலப்போக்கில் ஒரு குழப்பமான ஆட்சியாக மாறியது. ஏங்களுக்கு இன்று தேவைப்படுவது இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இது எமது நாடு என்று கூறிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்வதே ஆகும். எங்களுடைய எதிர்தரப்பினர் கூறுகின்றனர் எங்களுக்கு அவ்வாறு தேவையில்லை ஒரு இனவாதம் மிக்க நாடு இருந்தால்போதும் என்று கூறுகின்றனர்.
நீங்கள் எம்மை நம்பி அளித்த வாக்குகளுக்கு உங்களுடைய பாதுகாப்பினை நாங்கள் உறுதிப்படுத்தி தந்துள்ளோம். அன்று 170 ரூபாய் பெற்றோல் இன்று 145 ரூபாயாக குறைந்துள்ளது. ஆன்று சமையல் எரிவாயு 2700 ரூயாய் இன்று 1400 ரூபாய் இதுமாத்திரமா சீனி, பருப்பு, மீன்ரின், பால்மா போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை நாங்கள் குறைத்துள்ளோம்.
ஆனால் தற்பொழுது ராஜபக்சக்கள் நினைக்கின்றனர் இந்த நாட்டில் ஒரு கறுப்புச்சந்தை வர்த்தகத்தை உருவாக்கி அனைவரையும் சிக்கலில் தள்ளிவிடுவதற்கு.
முதன்முதலில் நாங்கள் நாட்டில் நிலவிவந்த அச்சத்தினை விலக்கி இருக்கின்றோம். வெள்ளைவேனில் கடத்தப்படுவதை நாங்கள் நிறுத்தியிருக்கின்றோம். இவ்வாறான நாட்டைத்தான் நாங்கள் முன்கொண்டுசெல்ல முயற்சிக்கின்றோம். இந்த மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் தொழிற்சாலைகளை கொண்டுவரவேண்டும்.
கடதாசி தொழிற்சாலைகளை நாங்கள் புனரமைப்போம், மீன்பிடி துறைமுகத்தை அமைத்து தருவோம், பால் உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். உங்களுடைய காணிகளில் உங்களுக்கு வீடமைத்து வாழக்கூடிய சூழ் நிலையைத்தான் நாங்கள் இன்று உண்டுபண்ணிக்கொண்டு இருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

