உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
அதிக இடம் கோரும் கட்சிகள்
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள அதிமுக, உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்காக தயாராகி வருகிறது. கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு வேண்டிய இடங்களை அதிமுகவிடம் கோரி வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்கவும், உள்ளாட்சித்தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை இன்று அதிமுக நடத்துகிறது. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், முழுமையாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

