பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு!

269 0

தமிழ் ஈழத்தில் ஈழத் தமிழர் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இனப்படுகொலையை வலியுறுத்தி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கலந்தாய்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரான்சு பாராளுமன்றத்தில் கடந்த 30 ஒக்டோபர் 2019 பிற்பகல் 2 மணிக்கு தமிழர்களுக்கான தமிழ் பாராளுமன்ற குழு பிரான்சில் இருக்கும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகள், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு, ஐரோப்பிய தமிழர் ஒன்றியம், தமிழ் இளையோர் அமைப்பு,தமிழ் இளையோர் சங்கம், தமிழ் பெண்கள் அமைப்பு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநகரசபை பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்தாய்வு பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு பிரான்சு தமிழருக்கான பாராளுமன்ற குழு தலைவர், Seine Saint Denis பாராளுமன்ற உறுப்பினர் Mme Marie George Buffet, உபதலைவர், Val d ‘ Oise பாராளுமன்ற உறுப்பினர் Francois Pupponi மற்றும் Seine Saint Denis பாராளுமன்ற உறுப்பினர் Mme Clementine Autain ஆகியோருடன் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த சத்திப்பு அண்மையில் முல்லைத்தீவு நீராவியடி கோவில் பகுதியில் புத்த பிக்குகளின் நாகரீகம் அற்ற செயலற்பாடுகள், தாய்மார்களின் 985 நாட்களாக நடக்கும் போராட்டம் 1000 நாட்களை கடக்கும் சூழலில், சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக சர்வேந்திரா சில்வாவை இராணுவத்தின் உயர் அதிகாரி ஆக்கி,சிறிலங்கா இராணுவத்தினரைப் பாதுகாப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இந்த விடயங்களை பிரான்சு அரசின் உயர் பீடத்துக்கு எடுத்து செல்வதற்கான செயல்திட்டங்கள், பாராளுமன்ற குழுவினால் முன்வைக்கப்பட்டது.

இந்த 1000 நாளை வலியுறுத்தி பிரான்சில் நவம்பர் 16 ஆம் திகதி போராட்டங்களை தமிழ் அமைப்புகள் ஒழுங்குசெய்ய இருப்பதாக இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற குழுவிடம் அறிவிக்கப்பட்டது.

இன்று தமிழர் தாயகத்தில் எமது தாய்மார்களின் போராட்டம் நவம்பர் 16 ஆம் திகதி 1000 நாளை அடையும் சூழலில் சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஓர் அமைப்பை உருவாக்கிய பின்பும் காணாமல் போன அவர்களது உறவுகளைப் பற்றிய தகவல் எதுவும் இல்லாத சூழல் இன்றும் காணப்படுகிறது.

Thiruchchothi
Responsable Bureau Politique
mte.france@gmail.com
06 52 72 58 67