சமையல் எரிவாயு பற்றாக்குறை தீர்க்கப்படும் – நிதி அமைச்சு

209 0

நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்தவற்காக  12,000 மெட்ரிக் தொன்  எரிவாயுவை அவசரமாக இறக்குமதிசெய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சமையல் எரிவாயுவை நிதி அமைச்சின் கீழ் இருக்கும் லிட்ரோ கேஸ் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வெளியிடப்படவுள்ளது.

நேற்றையதினம் ஒரு அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சு, 6000 மெட்ரிக் தொன் எரிவாயு பவுசர்கள் அடுத்த வாரம் அளவில் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும்,நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள 3600 மெட்ரிக் தொன் நிறையுடைய இரு சமையல் எரிவாயு பவுசர்களும் மேலதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த வாரத்திற்குள் எரிவாயு பற்றாக்குறை தீர்க்கப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.