வெளிநாட்டவர்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தைகூட விற்கவில்லை- சம்பிக்க

300 0

வெளிநாட்டவர்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தைகூட விற்கவில்லை என அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் அமெரிக்காவுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் எனவும் அமெரிக்காவின் மரணப் பொறியில் இலங்கை சிக்கியுள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பலர் கூறுகிறார்கள்.

உண்மையாகவே நாங்கள் அமெரிக்காவுடன் அத்தகையதொரு ஒப்பத்தில் கையெடுத்திடவில்லை. மேலும்  மிலேனியம் ஒப்பந்தத்தின் ஊடாக 480 மில்லியன் ரூபாய் டொலர் இலவசமாக  எமது நாட்டுக்கு கிடைக்கிறது.

இதனூடாக நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால், இந்த மிலேனியம் ஒப்பம் தொடர்பாக பொய்யான பரப்புரைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை வெளிநாட்டவர்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தைகூட நாங்கள் வழங்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.