ஐந்து கட்சிகளும் ஒருமித்த அறிவிப்பினை செய்ய வேண்டும்-அடைக்கலநாதன்

281 0

வன்னி மாவட்ட பாராளுமன்றம் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (02) முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கட்சிகளையும் ஒன்றிணைத்து அந்த ஐந்து கட்சிகளின் செயற்பாடுகளைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத பட்சத்தில் நாங்கள் தபால்மூலம் வாக்களிக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு சொல்லியுள்ளோம் நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம் இப்போது தேர்தல் அறிக்கை போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கை வெளிவந்துள்ளது இது ஆராயப்படவேண்டும்.

ஐந்து கட்சிகளும் ஒருமித்த அறிவிப்பினை செய்ய வேண்டும் என நான் எதிர்பாக்கின்றேன் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சம்மந்தன் ஐயா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கருத்து சொல்லியுள்ளார்கள் அது அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்க வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பதிலாகவோ அல்லது ஐந்து கட்சிகளின் பதிலாகவோ பார்க்க முடியாது அது தலைவர் அவர்களின் தனிப்பட்ட கருத்து சுமந்திரன் அவர்களும் தன்னுடைய அபிப்பிராயத்தினை சொல்லியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக இருந்து ஆராய்ந்து பார்த்து வாக்களிக்கின்ற மக்களுக்கு சொல்ல வேண்டும் இரண்டு மூன்று தினங்களில் ஐந்து கட்சிகள் கூடி தீர்மானத்தினை வெளியிட காத்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.