தமிழகத்தில் மேலும் 17 இடங்களில் ஆன்லைன் வேளாண் விற்பனை சந்தை

417 0

தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களை விற்க மேலும் 17 இடங்களில் ஆன்லைன் விற்பனை சந்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க, அவற்றை ஆன்லைன் மூலம் விற்க ‘இ-நாம்’ எனும் தேசிய வேளாண் விற்பனை சந்தையை மத்திய அரசு துவக்கியது. இந்த சந்தையோடு 585 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலுார், கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உட்பட 23 இடங்களில் ஆன்லைன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

பல கோடி வர்த்தகம்இந்த சந்தைக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாதந்தோறும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருகிறது. அதனால் ஆன்லைன் சந்தையை மேலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 17 இடங்களில் கூடுதலாக சந்தை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆன்லைன் விற்பனையை எளிமையாக்க இ-நாம் அலைபேசி செயலியும் உள்ளது.அதில் மண்டிகளில் இருப்பு உள்ள பொருட்கள் மற்றும் விலையை அறியலாம். மேலும் இதில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான சரக்கு விவரங்களை பதிவு செய்து வீட்டில் இருந்தவாறே பொருட்களை கொள்முதல் செய்யலாம். கொள்முதல் பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.