ரிசாத் பதியூதின் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர்களால் முஸ்லிம் மக்களின் தேவைகள் ஒருபோதும் நிறைவேறவில்லை என முஸ்லிம்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ஹசீம் இன்று (31) ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் பின்வருமாறு கூறினார்.
´மத சுதந்திரத்தையே முஸ்லிம் மக்கள் எப்போதும் விரும்பினர். ரிசாத் பதியூதின் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றோர் அந்த உரிமையை தாம் பெற்றுக் கொடுத்தாக நினைத்துக் கொள்கின்றனர்.
முஸ்லிம் தலைவர்களாக தம்மை காண்பித்துக் கொள்ளும் இவர்கள் பிரிவினைவாதிகள் அல்லர் என்பதை கூறமுடியாது.
அவர்கள் அரசியல் பிரிவினைவாதத்தை வளர்க்க முஸ்லிம்களை ஏலம் போடுகின்றனர். அவர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் கதைக்கவில்லை. மாறாக அவர்கள் முஸ்லிம் மக்களின் வாக்குகளை டீல் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
முஸ்லிம்கள் அனைவரும் பிரிவினைவாதிகள், மத வெறியர்கள் மற்றும் தீவிரவாதிகள். எனவே, அவர்கள் உங்கள் தேர்தல் மேடைகளில் இருப்பது பாரிய பிரச்சினையாகும் என அவர்கள் சஜித்திடம் கூறுகின்றனர்.
சஜித் வெற்றிப்பெற வேண்டுமாயின் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அவசியம். மாறாக ரிசாத் மற்றும் ஹக்கீம் ஆகியோர் அவசியமில்லை. முடிந்தால் அவர்களை மேடையில் இருந்து இறக்கி காட்டுங்கள்.
அவ்வாறு செய்தால் வாக்குகளை கேட்டு நாம் போராடுவோம். தற்போது தீவிரவாதிகள் உங்களை மூளைச் சலவை செய்துள்ளனர்.
இதுவே, முஸ்லிம் மக்களுக்கான இறுதி பஸ் வண்டி. எமக்கு பேசும் தலைவர்களைவிட செயலாற்றும் தலைவர்களே அவசியபப்படுகின்றனர்´ என்றார்.

