எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு முனைய திட்டங்களில் 2024-க்குள் ரூ.7 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

286 0

எரிசக்தி துறையில் வரும் 2024-ம் ஆண்டுக்குள் ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில், ‘எதிர்கால முதலீடு’ மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல்சாத், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தை அவர் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து இந்திய பொருளா தார துறை செயலாளர் டி.எஸ்.திருமூர்த்தி கூறும்போது, “பிரதமர் மோடியும் சவுதி அரேபிய மன்னரும் தீவிரவாதத்தை வேர றுக்க உறுதி பூண்டனர். கடல்சார் பாதுகாப்பு, வேளாண்மை, புதுப் பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்தார். மாநாட்டில் பங்கேற்ற ஜோர்டான் மன்னர் இரண் டாம் அப்துல்லாவையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியபோது, எரிசக்தி துறையில் எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் குழாய்கள், எரிவாயு முனைய திட்டங்களில் வரும் 2024-ம் ஆண்டுக்குள் ரூ.7,08,795 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரபு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், “அடுத்த ஆண்டு சவுதி அரேபியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. வரும் 2022-ம் ஆண்டில் இந்தியாவில் ஜி20 மாநாட்டை நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்