பிரான்சில் உணர்வடைந்த லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

390 0

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டவேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவகரும் ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 23 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 26.10.2016 சனிக்கிழமை அன்று பாரிசில் பந்தன் பகுதியில் அவர்களின் நினைவுக் கல்லறையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது
.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து குறித்த மாவீரர்களின் கல்லறைகள் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. கப்டன் கஜனின் சகோதரர்கள் மாவீர்களின் கல்லறைகளுக்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் குறித்த மாவீரர்களின் செயற்பாடுகள் குறித்து நினைவுரை ஆற்றினார்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)