மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இனி தபால் ஓட்டு போடுகிற வகையில் 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை நமது நாடு பெற்றுள்ளது. நமது நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதல் எண்ணிக்கையிலான வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வர வைத்து ஓட்டு போட வைப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் அவர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமை வழங்கப்படுகிறது.
தற்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும்தான் தபால் ஓட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு போட அனுமதிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு விட்டது.
அதன் அடிப்படையில் மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இனி தபால் ஓட்டு போடுகிற வகையில் 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே இனி இவர்கள் தபால் ஓட்டு போடலாம்.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவத்தில் தேர்தல் அதிகாரி சான்றளிப்பார். அதன் பேரில் அவர்களுக்கு தபால் ஓட்டு போடலாம்.

