அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதுடன், இதில் கலந்துகொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

