வடமராட்சி மீனவரின் படகை மோதி உடைத்த ஶ்ரீலங்கா மீனவரின் டாங்கிப் படகு.

357 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஆழ்கடலில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவரின் படகு ஒன்றுடன் தென்னிலங்கை மீனவரின் ராங்கி படகு மோதியதில் படகு பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்து கடலில் வீழ்நத மீனவர் நேற்று முன்தினம் தெயவாதீனமாக உயிர்தப்பி பிற மீனவர்களின் உதவியுடன் கரை சேர்ந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த மாரிமுத்து ரகுவரன் என்பவரது படகே மீள பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதுடன் அவரது பல இலட்சம் பெறுமதியான வலைகளும் கடலில் வீழ்நது நாசமாகியுள்ளது.இந்நிலையில் பிற மீனவர்களின் உதவியுடன் கரை சேர்ந்த ரகுவரன் உடனடியாகவே தமது கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக காப்புறுதி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.அவர்கள் படகை பார்வையிட்டுள்ளனர்.படகு அல்லது செலலியிணைப்பு இயந்திரமோ முற்றுமுழுதாக சேதமடைந்தால் மட்டுமே காப்புறுதி வழங்க முடியும் என்று கூறு காப்புறுதி கொடுப்பனவு வழங்க முடியாதென நிராகரித்துள்ளனர். சுமார் ஐந்து இலட்சம் பெறுமதியான படகு வேலியிணைப்பு இயந்திரம் வலைகள் என்பனவற்றை இழந்த மீனவர் நிர்க்கதியாகி உள்ளார்.

இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிசாந்தனிடம் கேட்டபோது பகல் வேளையிலேயே குறித்த மீனவர் கடலுக்கு சென்றதாகவும் காப்புறுதி செய்யும் போது சாதாரண வாகன்த்திற்க்கு எவ்வாறு காப்பீடு வழங்கப்படுகிறதோ அவ்வாறே படகுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறியே காப்புறுதி பணம் பெற்றுக் கொண்தாகவும் ஆனால் தற்போது அவ்வாறு ஏதும் செய்யப்படுவதில்லை என்றும் இதனால் உடனடியாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் சில மாதங்கள் முன்பாக வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் இவ்வாறு படகு ஒன்று கடற்படை விசைப்படகு மோதி முற்று முழுதாக சேதமடைந்ததாகவும் இதனால் பலரும் பாதிக்க படுவதாகவும் இவ்வாறான நிலமைகளை கட்டுப்படுத்த குறித்த திணைக்களம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.