மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்தில் 14 வயதுடைய சிறுமியை கர்பமாகியுள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 45 வயதுடைய அச்சிறுமியின் தந்தையை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக மஸ்கெலியா தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில்,
சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினால் சிறுமியை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போதும் சிறுமி வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் தந்தையை நேற்று 15ஆம் திகதியன்று கைது செய்ததாக தெரிவித்தார்.
மேலும் நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததாகவும் விசாரணை மேற்கொண்ட பின்னர் குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாகவும் குறிப்பிட்டார்.

