இருண்ட யுகமான மஹிந்தவின் ஆட்சி காலத்தை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்- நடராஜா

200 0

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நீதி, நியாயம் ஆகியவை புறந்தள்ளப்பட்டு ஒரு இருண்ட யுகம் காணப்பட்டமையை  தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்களென கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்துள்ளார் .

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடராஜா மேலும் கூறியுள்ளதாவது, “மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பல இன்னல்களையும் இழப்புக்களையும் தமிழ் மக்கள் சந்தித்தனர்.

அது ஒரு இருண்ட யுகம், நீதி நியாயமாக செயற்படமுடியாத காலம். ஆனால் அந்த நிலை பின்னர் மாற்றப்பட்டது.

கடந்த காலத்தில் கோட்டபாயவினால் வெள்ளை வான் கடத்தல், படுகொலைகள் ஆகியவை நடத்தப்பட்டன. இவைகளை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதற்கு தடையாக இருந்தவர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்று கைகோர்த்துள்ளதுடன் மகிந்த ராஜபக்ஷவின் நிழலாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயற்படுகின்றது.

இதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் என்ன செய்வேன் என்பதை விடுத்து இராணுவத்தினரை விடுவிப்பேன் என அனுராதபுரத்தில் தனது முதலாவது கூட்டத்திலேயே கோட்டாபய தெரிவித்த கருத்து அவரது நோக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.