நாட்டை குறுகிய காலத்தில் என்னால் முன்னேற்ற முடியும்- மகேஷ் சேனாநாயக்க

31 0

குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்றக்கூடிய செயற்பாடுகள் குறித்து தான் வகுத்து வைத்துள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகேஷ் சேனநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “கட்சி அரசியல் இல்லாமல் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய ஒரு குழு தன்னுடன் இணைந்துள்ளது

இதனூடாக குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்ற பாதையை நோக்கி எம்மால் கொண்டுச்செல்ல முடியும்.

கட்சி அரசியல் காரணமாக நாடு நீண்டகாலமாக ஏழை நாடாக இருந்து வருகிறது. இவைகளை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை நிச்சயம் முன்னெடுப்போம்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எக்காலத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்யப்படும்.

அத்துடன் கல்வியிலும் புதிய புரட்சி ஏற்படுத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.