அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

35 0
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாரவில கட்டுநேரிய பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநேரிய லங்சிகம பகுதியைச் சேர்ந்த காரின் சாரதியான பிரசங்க தினேஷ்க தெஹிபிடியாராச்சி (வயது 42) என்பவரே இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சாலியாவெ பகுதியிலிருந்து செங்கற்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற லொறியொன்றும், கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கி வருகை தந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த லொறி மறரறும் கார் ஆகியவற்றின் இரு சாரதிகளும் அங்கிருந்தவர்களால் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், காரின் சாரதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் லொறியின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.