அருவக்காடு குப்பைமேட்டில் வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

223 0

புத்தளம் – அருவக்காடு குப்பை சேர்க்கும் இடத்தில் கழிவு நீர் நிறப்பும் தாங்கியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அருவக்காடு குப்பை சேர்க்கும் இடத்தில் கழிவு நீர் தாங்கியில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாணத்துவில் பொலிஸ் சிலைத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அருவக்காடு விவகாரங்கள் குறித்து இதற்கு முன்னரும் வாணாதத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், திங்கட்கிழமை அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் பொலிஸார் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளனர்.

மீதேன் வாயுவின் காரணமாக இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரச இரச பரிசோகர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதுவரையும் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்வரும் 18 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெறும்.

இந்த சம்பவத்தின் போது எவ்வித உயிர் ஆபத்துகளோ , கழிவு நீரின் கசிவோ ஏற்பட வில்லை . தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை மேற்படி வெடிப்பின் காரணமாக குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலமை ஏற்பட்டிருந்ததுடன் , கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற 29 லொறிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.