தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – யேர்மனி

712 0

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய யேர்மனி வாழ் தமிழீழ மக்களே,

என்றுமில்லாதவாறு மிகப்பெரும் ஓர் அரசியல் பொறிக்குள் நாம் சிக்குண்டு தவிக்கும் காலமிது. சிங்கள அரசபயங்கரவாத்துடன் சில பிராந்திய, மற்றும் வல்லரசுகளும் இணைந்துகொண்டு எமக்கெதிராக பெரும் சூழ்ச்சி வலையினைப் பின்னியுள்ளது. இவ்வேளையில் எமது மக்களின் விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் அயராது அர்ப்பணிப்போடு உழைத்துவருகின்ற, கணிசமான மனிதநேயப் பணியாளர்களினால் இதனை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது. இதற்கான பதில், மலைபோன்ற தடைகளையும் தாண்டி, பெரும் சூழ்ச்சிக்கும்  முகம்கொடுத்தவாறு எம்மால் தொடர்ந்து பயணிக்கமுடியும் என்பதுதான்.ஏனெனில் எல்லாவற்றையும் எதிர்கொளும் ஓர் ஆன்மபலத்தினை, உந்துசக்தியினை, எமது மாவீரர்களின் நினைவுகள் எமக்கு தந்துகொண்டே இருக்கும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எமது மாவீரர்களின் நினைவுகள் தமிழர்களின் மனங்களைவிட்டு அகலப்போவதில்லை. உயிரோடு ஒட்டியிருக்கும் உன்னதமான எங்கள் தெய்வங்களின் ஓர்மநினைவுகள் உலகம் உள்ளவரை மறையாது.

இவ்வாண்டும் மாவீரர் நினைவெழுச்சி நாள் எதிர்வரும் நவம்பர் 27ம் நாள் புதன்கிழமை யேர்மனியில் நடைபெற உள்ளது. இப்புனித நாளில் எமக்குள் இருக்கின்ற எல்லாவகையான முரண்பாடுகளையும் களைந்து பெருந்திரளாக நாம் ஒன்று திரண்டு மாவீரர்களை வணங்குவதோடு, எவ்வகை இடர்கள் ஏற்படினும் அவர்களது உன்னத இலட்சியங்களை உறுதியோடு நாங்கள் முன்னெடுப்போம் என்ற செய்தியையும் உரத்துச்சொல்லுவோம். 2008ம் ஆண்டுக்குப்பின் பதியப்படாத மாவீரர்களின் உறவுகள் இருப்பீர்கள் எனில் நவம்பர் 14ம் திகதிக்கு முன் கீழ்க்கண்ட மாவீரர்பணிமனைப் பணியாளர்களோடு தொடர்பு கொண்டு விபரங்களை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு மாவீரர் நினைவாக வெளிவருகின்ற ‘கார்த்திகை தீபம்’ சிறப்பு மலருக்கான ஆக்கங்களையும் ஒக்ரோபர் 30ம் திகதிக்கு முன் எமக்கு அனுப்பிவைக்குமாறும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள் போராட்டம் சார்ந்த படைப்புக்களை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது எமது பணியகத்துக்கோ அனுப்பிவைக்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.

‘ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பி விடுகின்றது’

-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

 

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’