காலி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அந்த மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதாண பத்திரண தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தெரிவு அத்தாட்சி அதிகாரி தகவல் தருகையில் 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சுமார் 750 அரச ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேவையான வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பில் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் தேர்தல் சட்ட விதிகளை மதித்து எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டுமென்று பொது மக்களை நாம் விலியுறுத்த விரும்புகின்றோம்.
நடமாடும் பாதுகாப்பு சேவை உள்ளிட்டவற்றை நாம் மேற்கோண்டுள்ளோம் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் விதிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும். முதலில் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
எல்பிட்டிய பிரதேச சபைக்குள் 17 பிரிவுகள் செயற்படுகின்றன. இந்த 17 பிரிவுகளிலும் வெற்றி பெற்ற கட்சிகள் தொடர்பான பெறுபேறுகள் வெளியிடப்படும்.
இதன் பின்னர் இந்த 17 பிரிவுகளின் பெறுபேறுகளை ஒன்றிணைத்து மொத்த பெறுபேறுகளை அறிவிப்பதற்கான மத்திய நிலையம் ஒன்றை எல்பிட்டியவில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிலையத்திற்கு எல்லா பெறுபேறுகளும் கொண்டு வரப்பட்டு இறுதி பெறுபேறு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

