ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் கோட்டாவை ஆதரிப்பதனை உறுதி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய சூழ்நிலையில் பார்க்கின்றப்போது 95 வீதமானவர்கள் கோட்டாவிற்கு ஆதரவளிப்பது உறுதியாகியுள்ளது.
ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளது. மேலும் சமஸ்டிக்கு எதிரானவர்களே நாட்டில் அதிகம் உள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தற்போது இறுக்கமான சூழலில் அகப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

