நாடு, இனம், மதம் தொடர்பில் மிகவும் விளக்கமுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் வந்து இணைந்து கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு தம்முடன் வந்து இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கேட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பொதுஜன பெரமுனவுடன் பல்வேறு தரப்பட்ட கட்சிகளும் வந்து இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

