ரயில்வே பணியாளர்களின் விடுமுறை இரத்து – பணிக்கு திரும்புமாறு அழைப்பு

258 0

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதனால் பணியாளர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு அனைவரையும் பணிக்கு திரும்புமாறு ரயில்வேயின் பொது முகாமையாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை, ரயில் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரயில் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.