தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.

483 0

3.10.2019 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாக தீபம் லெப.; கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஸ்ருட்காட்டிலும் அதனை அண்டிய நகரத்திலும் வாழும் மக்கள் வருகை தந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு தங்களின் வீரவணக்கத்தை மலர் தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

பொதுச்சுடர், ஈகைச்சுடர், ஏற்றிவைக்கப்பட்டு பின்பு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மக்கள் அணியணியாக வந்து மலர் தூவி சுடர் ஏற்றி வணக்கத்தைத் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இசைவணக்கம், எழுச்சி நடனங்கள், கவிவணக்கம், சிறப்புரை, என பல நிகழ்வுகள் நடைபெற்றது பின்பு தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.