போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

318 0

தலைமன்னார் பிரதேசத்தில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 

தலைமன்னார் பொலிஸாருக்கு  கிடைத்த தகவலுக்கு அமையச்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் வீடொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  ஹெரோயின் 20 கிராம், ஐஸ் 400 மில்லிகிராம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய செலமன் ஸ்டெனிஸ் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.